எழுத்தாளன் என்பவன் வெறுமனே பொழுதுபோக்குவற்காக எழுதி குவிப்பவன் அல்ல, என்ற கருத்துடன் செயல்படுபவன் நான். அதனடிப்படையில் அறுபடும் விலங்கு, கறுப்புவிதைகள் என்ற எனது இரண்டு புதினங்களை தொடர்ந்து "கருப்பர் நகரம்" என்ற எனது மூன்றாவது புதினத்தை எழுதி வருகிறேன். தடாகத்தில் அது தொடராக வரவுள்ளது.
தற்போது திரைபடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன். மறுக்கபட்ட , மறைக்கபட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை, அவர்களின் வரலாறுகளை படைப்பதே என் நோக்கம். எனக்கு நானே சொல்லி கொள்ள முடியும், நான் மிக சிறந்த வாசகன் என்று. தமிழில் வாரா, கே.டானியேல், பிரபஞ்சன் அவர்களையும் எனது ஆசான்களாக போற்ற எனக்கு உரிமையுண்டு.
நான் பெரிதும் வியந்து நேசித்த அயல்நாட்டு படைபாளிகளில், எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியோர் என்று பெரும் பட்டியலுண்டு அதில் மிக நெருக்கமான தோழனாக என்னை உணர வைத்தவனும், ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த தன் எழுத்தை பயன்படுத்தியவனுமான மக்சீம் கார்க்கியை என் மிக முக்கியமான ஆசானாக கொண்டிருக்கிறேன். அந்த கலைஞன் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளதாக நான் உணர்கிறேன். அவனுக்கும் கூட யாரும் அருகில் உட்கார்ந்து கைபிடித்து கற்று தரவில்லை. அவன் தானாகவே கற்று கொண்டான். பிழைத்திருக்க முடியா நாட்களிலும் அவன் கற்று கொள்வதில் வாழ்ந்தான். அதனால் தான் அவனால் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை சொல்ல முடிந்தது, அவனது தாய், அர்ததமோனோவ், மூவர் போன்ற புதினங்களை படித்து விட்டு அவன் பெயரை தலையில் சுமந்து கொண்டு திரிந்திருக்கிறேன். என் முன் எதிர்பட்டவர்கள் எல்லோரிடமும் அவனை பற்றி, அவன் படைப்பை பற்றி, பேச ஆசை கொள்வேன். விளைவு தினகரன் என்ற நான் கரன்கார்க்கியானேன். என்னை பற்றி போதும்!
கருப்பர் நகரத்தில் உலாவுங்கள்
இயல்புமீறாத, மீறிய... கூடுதல் நிறம் எதுவுமற்ற, மனிதர்களை நீங்கள் காண கூடும்.
கரன்கார்க்கி
9884518986
jdkarankarki@gmail.com
No comments:
Post a Comment