Monday, October 11, 2010

ஆயிரமாவது ஆண்டு

அந்த ஒரு ஜோடி கண்கள் பால் வீதியினிற்று பல நூறு ஒளியாண்டு தூரத்திலிருந்து பூமிக்கு வந்திருந்தது, பூமியின் ஒவ்வொன்றை பற்றியும் அது எங்கோ தகவல் அனுப்பி கொண்டிருந்தது. அது இப்போது பிரமாண்டமான கற்கோபுரத்தின் மீது தன் பார்வையை செலுத்தி ஆய்ந்தது, அது ஆயிரமாண்டு கற்கோபுரம் என்று முன்பே பதியபட்டுள்ள தகவல் அதற்கு தெரிவிக்கபட்டது.


நிறம், வடிவம் அனைத்தையும் பதிந்து அது தகவல்களை அனுப்பி கொண்டிருந்தது அது அனுப்பிய வேகத்தில் உடனே அதற்க்கு பதிலும் கிடைத்தது. அதன் தொழில்நுட்பமும் அது சார்ந்த சமூகத்தின் நுட்பமும் அப்படி.


பெருங் கொபுரத்தின் மிக அருகாக அது பறந்து கொண்டிருந்தது. கோபுரத்தின் கம்பீரம் அதன் வடிவம் அது பூமியை துளைத்து நிற்க்கும் அடிதளம் வரை அதன் விழிகள் பாய்ந்தது. வெளிபுர ஆய்வு முடிந்து உள்ளரங்கினுள் நுழைந்து பெரும் விலங்கினுருவம் தாண்டி உள்ளே பாய்ந்தது.


வெளிபுர ஆய்வு முடிந்து உள்ளரங்கினுள் நுழைந்து பெரும் விலங்கினுருவம் தாண்டி உள்ளே பாய்ந்தது. பிரமாண்ட கோபுரத்தின் உள் பகுதி வெற்றிடமாய் பெரும் குகை போல, மேலே போக போக குறுகி கொண்டே போனது. அதனடியே உருளையான தொரு கரும் உருளை கிழே வட்டவடிவம் தாங்கி நிற்பதாக தகவலனுப்ப அதற்க்கு விளக்கமாக இப்படி பதில் வந்ததும்.


ஆம் அது அங்கு வாழும் மனித உயிர்களின் பிற்புறுப்புகள். ஆமாம் அது புரிந்து கொண்டது. அது பூமி பரப்பில் பார்த்தவைகளை சரி பார்த்து ஆம் உண்மை தான் என்று பதிலனுப்பியது. அது ஆதி தத்துவம்.


அந்த பெரும் குறியின் மீது பால் பழம் ஐந்து அமிர்தங்கள் என ஊற்றி கொண்டிருந்தார்கள் கீழே இருப்பவர்கள் அதை அள்ளி வரிசையா காத்து நிற்க்கும் மனிதர்களுக்கு அள்ளியும், கிள்ளியும் தந்து கொண்டிருந்தார்கள். தந்தவர்களின் தட்டுகளில், பல வண்ண காகிதங்கள் விழுந்து கொண்டேயிருந்தன . பெற்ற அந்த அமிர்தங்களை நீளமான நாக்குகள் நக்கி சென்றன. அந்த இடம் பெரும் இருள் ஆழ்ந்திருந்தது, ஆயிரமாண்டாக சூரியன் படாத இடம்.


பெருவிழிகள் அந்த பரந்து விரிந்த வளாகத்தை கடந்து வான் நோக்கி பறந்து உச்சியில் இருந்து பார்த்தது. எவ்வளவு பெரிய கைகள் இதை செய்ததோ அது வியந்தது. பெருங்கைகள் அல்ல சிறுங்கைகள் தாம் ஆனால் பல ஆயிரம் கைகள், அதற்க்கு அறிவுறுத்தபட்டது.வேறு பல தகவல்களாக முன்பே பதியபட்ட விவரங்களும் அதற்க்கு தரபட்டது.


அந்த பிரமாண்ட அழகு கட்டி முடிப்பதற்க்குள் எண்ணூற்றி எண்பத்து எட்டு உயிர்கள் பலியாகி உள்ளன. விபத்து, தண்டனையென, நாணுற்றி நாற்பது பேர் ஊன மாக்கபட்டுள்ளனர். பெரும் மக்கள் படையாக ஆறாயிரம் பேர் அந்த பிரமாண்டத்தை கட்ட உழைத்துள்ளனர் .ஆனாலும் உழைத்தவன், ஊனமானவன் விந்திலிருந்து கருவான எவனுக்கும் இவ்விடம் அன்னியமாக்க பட்டு தூர விலக்கி வைக்கபட்டனர்.


பெரும் விழி ஒரு கணம் மூடி திறந்தது. ஆயிரமாண்டு பின்னோக்கி போக உத்தரவு கேட்டது.


மிக உயரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த பெரு விழி கண நேரம் திகைத்தது அதனடியில் தெரிந்த எல்லாம் மாறின கோபுரம் இருக்குமிடம் பெருகாடாய் விரிந்தது. பெருங்கற்கலின் குவியல் பரந்த வெளியில் சிற்பிகாண் உளிகள் ஓயாமல் கல்லில் மோதி எழும் ஓசை பெருவிழி தாண்டி வெளியெங்கும் பரவி ஒலித்து கொண்டிருந்தது பரந்து விரிந்து பெரும் பரப்பின் நடுவில் நிள் சதுரவாக்கில் பெரும் பள்ளம் பூமியின் ஆழ்த்திலிருந்து கட்டிடம் வளர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும் செவ்வக கற்பாலங்கள் பள்ளத்தில் இறக்கபட்டன. பெருங் கூச்சல். உத்தரவுகள் கல்லின் இடுக்கில் சிக்கி கொண்டவர்களின் மரண ஓலம் கற்பாலங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் போது எழும் ஓசை வியர்வையின் பெரும் வாடை அதனூடே எழும் ஆவியின் படலம் வான் நோக்கி எழுந்து கொண்டிருந்தது. அதே வேலையில் தந்தங்கள் உராயும் ஓசையும் பிளிரலும் கடும் உழைப்பின் மாசற்ற ஓசைக்கு அருகே பணியிட பரப்பின் நான்கு மூலைகளில் பெரும் சதுர வேள்வி மேடைகளில் நெய்கள் ஊற்றபட்டு பலவிதமான வேர்கள் ஒன்பது வகையான உணவு விதைகள் அதில் விசப்பட்டு கொழுந்து விட்டெரிந்து கருகி சாம்பலாகி கொண்டிருந்தன. அதன் வாடை அப்பெரும் பரப்பை கடந்து சுற்றிநின்ற பெருங்காட்டினுள் போய் மறைந்தது. சூழ்ந்து நின்ற அறிவாளிகள் தங்கள் பேராசை கொண்ட வாயிலிருந்து யாருக்கும் புரியாத வார்த்தைகளை பாறைகளை பார்த்து அதை செதுக்கு நேர்நிறுத்தி கொண்டிருக்கும் மனிதருக்கு தெரியாத மொழியில் பேராசையோடு புலம்பி கொண்டிருந்தனர். அந்த ஓசை அவர்கள் உதடுகளில் இருந்து புறப்பட்டு அவர்களது கொழுத்த காதுகளுக்கே திரும்பின . ஆனால் அது வான் வெளி கடந்து பாம்பின் மீது சல்லாபித்து கிடப்பவனிடம் போய் சேர்ந்ததாக சொல்லிருந்தார்கள். 


மர்மங்கள் நிறைந்த ஓசைகளிடேயே தீயில் வெளிப்படையாக வந்த புகை பரவி திரிந்ததொரு பகுதியில் பச்சை மாறாத தென்ன கீற்றுகளினால் பனயபட்ட குடில்கள் , அழகிய சிறியவர்கள் பெரியவர்கள் மாதிரிகள் முழுமையாய் தெரியும் படியான அலங்காரங்களுடன் காமத்தின் மொழிகளந்து தாபத்தின் பொரும் மூச்சோடு அடிவயிற்றில் கிறுகிறுப்பு உண்டாக்கும்படியாய் சிரித்து பறித்து வந்த மலர்களை மாலைகளாக்கி கொண்டிருந்தார்கள்.


வேள்வியின் வெப்பத்தால் களைப்புண்டவர்கள் பாலறியா கொங்கைகளில் ஊரறியா பொழுதுகளில் திளைத்து தங்கள் வெப்பம் தணித்து வேள்வியினால் எழும் தீயின் புகையை மேகம் தழுவ வைத்து கொண்டிருந்தார்கள்.


பேரழிகள் மத்தியில் ஒரழகி மின்னினாள் பெருவிரியே சற்று திகைத்தது. தனக்குள் பதிந்திருந்த தகவல்களை ஆராய்ந்தது. ஆதே வேளையில் புகையின் மணத்துடன் சந்தனத்தை கைகளிலே குழைத்து கொண்டு அவளின் குடிலுக்குள்ளே ஒருவன் மார்பிலே புரண்ட வெண் இழையை தளர்த்தி கொண்டு அவருடைய சின்ன சிறு ஆடைகளை தளர்த்தி கொண்டிருந்தான்.


முனங்களும், சினுங்களும், சிரிப்பு மாய் கடந்த நிமிடங்களில் புரிந்தது பெருவிழிக்கு.


அதனுள் இருந்த தகவலின் படி ஒரே விதையில் இருந்து வந்த விந்தால் உருவானவர்கள் சிறு கூடாரம். பெருங் கூடாரம் வெட்ட வெளியென்று எங்கும் சுற்றி திரிந்தாள் அவளது மாதிரியில் பல சிற்பங்கள் பதுமைகளாய் உறங்கி கிடந்தன. எரியும் தீயில் எண்ணை ஊற்றுபவர்களுக்கு. பெருந்தச்சர்களும் சேர்ந்து அவளில் உண்டாக்கியிருந்தார்கள்.


பெருங்கூடாரம் அதில் பெண்களின் பரிதாபகரமான கூக்குரல்கள் பல கேட்டன. அதில் அழகிகள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். பெரிய உடலுடன் வயோதிக பெண்கள் காவலிடுக்க அந்த கூடாரத்தினுள் பெரு விழி விழைந்தது.


கன்று ஈனும் யானையின் அலறல் கேட்டு வேறு பல யானைகளும் பதிலுக்கு பிளிறின அந்த பேரோசை கேட்டு அழகிகள் காதை பொத்தினார்கள்.உயிருள்ள சிலைகள், பேரழகிகள். நடமாடும் மலர் குவியல்கள். அடிவயிற்றை பிடித்து அலறி கொண்டிருந்தார்கள். அழகிய வயதான பெண்கள் சிறு சட்டிகளில் நிறைந்திருந்த குருதியை கூடாரத்துக்கு வெளியே எங்கோ கொட்டி கூடாரத்துக்குள் திரும்பினார்கள்.


சிகிச்சையின் போது அவர்களுக்கு மது தரபட்டிருந்தது. அந்த உலகம் உளிகளின் ஓசையால் நிரப்பபட்டு அழகிகளின் அலறல் அடங்கி கிடந்தது.


தென்ன கீற்றுகளால் கூரையமைத்து சுற்றிலும் வண்ண திரைகளால் மறைக்க பட்டிருந்த பெருங்குடில்களில் மதுமயக்கத்துடன் வலியின் துயரத்தால் லேசான முனங்களுடன் படுத்து கிடந்தார்கள் .


அவர்களின் ஒலத்தையும் கல்சிதறும் ஓசைகளையும் மீறி அந்த பெரும் பரப்பின் நான்கு மூலைகளிலும் அங்கு பேசும் மொழியல்லாது வேறுபட்ட புதியாத மொழியில் பெரும் கூச்சல் கேட்டபடி இருந்தது. பெரு விழி அதிலே ஆர்வமுற்று அங்கே நகர்ந்த பொழுதில் பெரும் சதுர மேடைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதிலே தூய நெய்யும், சிறந்ததில் சிறந்ததான தானியங்களும் கொட்டபட்டன. நறுமணம் தரும் காய்ந்த தாவரங்கள் இன்னும் பலவும் அங்கே தீய்ந்து சாம்பலாகி கொண்டிருந்தன. எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றும்பவர்களின் பேராசை மிக்க கூக்குரல் பேராசையோடு ஒலித்து கொண்டிருந்தது. யானையின் பிளிரல் சற்று அதிகமாகவே கேட்டது.





[ அடுத்த வாரம் முடிவுறும் ]

No comments:

Post a Comment